கலக்குவோம் கலக்குவோம் இந்த
உலகத்தையே கலக்குவோம் நாங்கள்
மாற்றுத்திறன் படைத்தோர் நாங்கள் உலகில்
மட்டற்ற சாதனை படைத்திடுவோம் என்றும்
கை கால் குறையின்றி நாளும்
உழைக்காமல் உண்ணும் சோம்பேறிகள் உண்டு
கை கால் குறையிருந்தும் என்றும்
உழைக்காமல் உண்பதில்லை நாங்கள்
பார் புகழ்ந்திட உழைப்போம் நாங்கள்
பரிசுகள் பல வெல்வோம் நாங்கள்
கவலைக்கு இடம் கொடுப்பதில்லை நாங்கள்
கலை வளர்க்கவும் தவறுவதில்லை நாங்கள்
ஆடுவோம் பாடுவோம் என்றும்
ஆனந்தக் கூத்தாடுவோம் நாங்கள்
கருணை கேட்கவில்லை நாங்கள்
கனிவோடு நடத்திடுங்கள் நீங்கள்
உடல்குறை குறையே அன்று
உள்ளத்தின் குறையே பெரும் குறையாகும்
குறையை குறையாக நினைப்பதில்லை நாங்கள்
குறையையும் நிறையாக நினைப்பவர்கள் நாங்கள்
பிறக்கும் போதும் குறை உண்டு
பிறந்த பின்னும் குறை உண்டு
கல்வியிலும் படைத்தோம் பல சாதனை
விளையாட்டிலும் வென்றோம் கடந்தோம் சோதனை
சகலகலா வல்லவர்கள் உண்டு எங்களில்
நடனக் கலைஞர் மறைந்த குட்டியும், வாழும் சுதாசந்திரனும் எங்களினம்
பார்வையின்றி பார் புகழ வாழ்கின்றார் பலர்
பார்வை இருந்தும் பயனற்று வாழ்கின்றார் பலர்
மண்ணுக்கும் தீயுக்கும் இரையாகும் விழிகளை
மனிதனுக்கு வழங்கும் உள்ளம் பெறுங்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
Comentários:
Post a Comment