மழைக்காலங்களில்...

Sunday, December 13, 2009.
பாலாஜி.ச.இமலாதித்தன்

மழைக்காலங்களில்
நீ
குடை பிடித்து
செல்லும்
நேரங்களில்
உன்னை
தழுவ
முடியாமல்
மழைதுளிகளெல்லாம்
தத்தளித்து
அந்தரத்திலேயே
நிற்கின்றன
தரையை
தொடாமலேயே...

மழைக்காலங்களில்
உன்
புன்னகை
காணாத
வானவில்லும்
சாயம்
வெளுத்து
சாய்ந்து
கிடக்கிறது
வானில்
வண்ணங்களற்று...

மழைக்காலங்களில்
உன்மேல்
விழுந்த
ஒருசில
மழைத்துளிகளும்
பிரிய
மனமில்லாமல்
உன்னை
இறுகப்பற்றி
கொள்கின்றன
என்னைபோலவே...

மழைக்காலங்களில்
நீ
குடை பிடித்து
மழையில்
நடக்கும்போதெல்லாம்
உன்னுள்
கூடல்
கொள்ள முடியாத
மழைதுளிகளெல்லாம்
கோபித்து கொண்டு
சண்டையிடுகிறது
உன்
குடையோடு...

மழைக்காலங்களில்
உன்னை
தொடாமல்
மண்ணை
தொடும்
மழைத்துளிகள்
கண்ணீரோடே
வழிந்தோடுகிறது
சாலையோர
சாக்கடையில்...

மழைக்காலங்களில்
உன்னை
தொட்டுவிட்டு
மண்ணை
தொடும்
மழைதுளிகள்தான்
மோட்சமடைகிறதாம்
அதனால்
குடையை
கொஞ்சம்
தூர
வைத்துவிட்டு
தூரலில்
கொஞ்சம்
உன் முகத்தை
காட்டிவிடு...
எனக்கு
செய்த
பாவம்போக்க
இதுபோல்
புண்ணியங்கள் சில
செய்து விடு....!

Comentários:

 
VIJAYA KUMAR R R © Copyright 2010 | Design By Gothic Darkness |