காதல் என்பது

Sunday, December 13, 2009.
அகில்

காதல் என்பது
கற்களால் கட்டப்படுவதல்ல
இதயங்களால் கட்டப்படுவது

காதல் என்பது
இதயங்களைப் பிரிப்பதல்ல
இதயங்களை இணைப்பது

காதல் என்பது
தூற்றப்பட வேண்டியதுதல்ல
பூசிக்கப்பட வேண்டியது

காதல் என்பது
புயல் போன்றதல்ல
தென்றல் போன்றது

காதல் என்பது
நிறத்தைப் பொறுத்ததல்ல
இதயத்தைப் பொறுத்தது

காதல் என்பது
வயதைப் பொறுத்ததல்ல
மனதைப் பொறுத்தது

காதல் என்பது
ஆற்றல்களைக் கட்டுப்படுத்துவதல்ல
ஆற்றல்களை
வெளிக்கொண்டு வருவது

காதல் என்பது
பிறரை இனம் காண்பது மட்டுமல்ல
உன்னை நீயே இனம் காண்பது

காதல் என்பது
ஆண்டவனிடம் நீ
சரணடைவதல்ல
அந்த ஆண்டவனையே
உன்னிடம்
சரணடையச் செய்வது!

காதல் என்பது
சாக்கடையல்ல
சரஸ்வதி
இதில்
வேடிக்கையென்னவென்றால்......
நீந்தத் தெரிந்தவர்களே
கரையேறுகின்றார்கள்
முடியாதவர்களோ
மூழ்கிப் போகின்றார்கள்.

Comentários:

 
VIJAYA KUMAR R R © Copyright 2010 | Design By Gothic Darkness |